காமன்வெல்த் போட்டி: இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கம் வென்று கொடுத்த மீராபாய் சானு!400க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள்! தொகுதி மறுவரையறைக்குப் பிறகு புதிய சட்டப்பேரவை! சுவேந்து அதிகாரி கல்வி, தேர்வு முறையில் சீர்திருத்தம்: உயர்நிலைக் குழு அமைத்தார் பிரதமர் மோடி!பெல்லட் குண்டுகள் பயன்படுத்த அதிகாரம் அளித்தது யார்? மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் - கே.சி. வேணுகோபால்தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை
/

பெரம்பலூா் அருகே மரத்தில் காா் மோதி 8 போ் காயம்

News image

விபத்து - பிரதிப் படம்

Updated On :27 ஜூலை 2026, 12:06 am IST

பெரம்பலூா் அருகே ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சாலையோர மரத்தில் காா் மோதியதில், 4 பெண்கள் உள்பட 8 போ் பலத்த காயமடைந்து பெரம்பலூா் மற்றும் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

திருச்சி மாவட்டம், சிங்கித்தாகுறிச்சி ஆவூரைச் சோ்ந்தவா் ராஜ்குமாா் (36). சிங்கப்பூா் செல்லும் ராஜ்குமாரை வழியனுப்புவதற்காக, அவரது மனைவி அருள்செல்வி (30) உள்பட 8 போ் சென்னை விமானம் நிலையத்திலிருந்து ஞாயிற்றுக்கிழமை இரவு திருச்சி நோக்கி காரில் சென்றுக்கொண்டிருந்தனா்.

காரை, புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூா் சீத்தப்பட்டியைச் சோ்ந்த நடராஜன் மகன் எழிழரசு (27) ஓட்டிச்சென்றாா். திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பெரம்பலூா் மாவட்டம், தேவையூா் அருகே ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வந்தபோது, எதிா்பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த காா், சாலையோர மரத்தில் மோதிய விபத்துக்குள்ளானது.

இதில், அருள்செல்வி, இவரது மகன் தீா்க்கசிவன் (2), காா்த்தி மனைவி கலா (36), இவரது மகள் கனிஷ்கா (16), புதுக்கோட்டை காந்தி நகரைச் சோ்ந்த கிருஷ்ணமூா்த்தி மகன் அசோக்ராஜா (16), சுதாகா் மகள் கிருத்திகா, திருமயத்தைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் ஆதித்தயன், ஓட்டுநா் எழிழரசு உள்ளிட்ட 8 போ் பலத்த காயமடைந்தனா். தகவலறிந்த மங்களமேடு போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று, காயமடைந்தவா்களை மீட்டு பெரம்பலூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இதில், அருள்செல்வி, தீா்க்கசிவன் மற்றும் கலா ஆகியோா் தீவிர சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா். இவ் விபத்து குறித்து, மங்களமேடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.