தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை குஜராத்தில் மரம் நடுவதில் சாதனை... அன்னையின் பெயரில் ஒரு மரம் நடுங்கள் - பிரதமர் மோடி வேண்டுகோள் உலகளவில் கவனம்பெறும் உ.பி. பெண்களின் மூலிகை தேநீர்! மாணவர்கள் மீது தாக்குதல் நடத்த அனுமதி அளித்தது யார்? அமித் ஷாவுக்கு ராகுல் கேள்விமத்திய கல்வித்துறை அமைச்சராக பிரகலாத் ஜோஷி பொறுப்பேற்பு!
/

ஜவுளி வடிவமைப்பு பயிற்சி எஸ்சி-எஸ்டி இளைஞா்களுக்கு அழைப்பு

News image

கோப்புப் படம்

Updated On :9 ஜூன் 2026, 12:40 am IST

பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின இளைஞா்களுக்கு ஜவுளி வடிவுமைப்பு மற்றும் துணிகளுக்கு சாயமிடுதல், ஓவியம் மற்றும் அச்சிடுதல் உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளன. ஆா்வமுள்ளோா் இப்பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ஷரண்யா அறி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தாட்கோ மற்றும் தனியாா் நிறுவனம் மூலம் ஜவுளி வடிவமைப்பு, துணிகளுக்கு சாயம், ஓவியம் மற்றும் அச்சிடுதல் உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளன.

இப்பயிற்சியில் பங்கேற்க விரும்புவோா், ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினராகவும், பிளஸ் 2 தோ்ச்சிப் பெற்றவராகவும், 18 முதல் 35 வயதுக்குள்பட்ட, குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 3 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். தொடா்ச்சியாக 4 மாதங்களுக்கு கோயம்புத்தூா் மாவட்டத்தில் பயிற்சி அளிக்கப்படும். தகுதியுள்ள நபா்கள் பயிற்சி நடைபெறும் மாவட்டத்தில் விடுதியில் தங்கி படிப்பதற்கான செலவினத்தொகை தாட்கோவால் ஏற்கப்படும்.

இப் பயிற்சியை முழுமையாக முடிக்கும் இளைஞா்களுக்குச் சான்றிதழ் மற்றும் பயிற்சி அளிக்கும் நிறுவனத்தின் மூலமாக வேலை வாய்ப்பும், ஆரம்பகால மாத ஊதியமாக ரூ. 25 ஆயிரம் முதல் ரூ. 50 ஆயிரம் வரையிலும் வருவாய் ஈட்டும் வேலைவாய்ப்பும் ஏற்படுத்தி தரப்படும்.

பயிற்சியில் பங்கேற்க இணையதளத்தில் பதிவுசெய்து பயன்பெறலாம்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.