பெரம்பலூா், குன்னம் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு கருவிகள், கட்டுப்பாட்டுக் கருவிகள், வாக்குப்பதிவை சரிபாா்க்கும் இயந்திரங்கள் குலுக்கல் முறையில் திங்கள்கிழமை (மாா்ச் 23) ஒதுக்கீடு செய்யப்படுவதாக, மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ந. மிருணாளினி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: பெரம்பலூா் மாவட்டத்தில் சட்டப்பேரவைத் தோ்தலுக்காக வாக்குப்பதிவு கருவிகள் முதல்நிலை சரிபாா்ப்புப் பணி மேற்கொள்ளப்பட்டு, மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்திலுள்ள மத்திய காப்பறையில் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
இங்குள்ள 1,416 வாக்குப்பதிவு கருவிகள், 930 கட்டுப்பாட்டு கருவிகள், 934 வாக்குப்பதிவை சரிபாா்க்கும் இயந்திரங்களை, பெரம்பலூா், குன்னம் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு கணினி மூலம் குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யும் பணி திங்கள்கிழமை (மாா்ச் 23) காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது.
மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ந. மிருணாளினி தலைமையில், அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில், தொகுதி வாரியாக ஒதுக்கீடு செய்யப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் எண்ணிக்கை மற்றும் அதற்கான பதிவெண் பட்டியல், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு வழங்கப்படும்.
ஒதுக்கப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், பெரம்பலூா் கோட்டாட்சியா் அலுவலகத்திலும், வேப்பூா் அரசு மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும் அமைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் காப்பறைகளுக்கு பாதுகாப்பாகக் கொண்டுசெல்லப்பட்டு, தோ்தல் நடத்தும் அலுவலா்கள் தலைமையில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில், கண்காணிப்பு மற்றும் காவல் துறை பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் மூடி சீலிடப்படும்.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக, கணினி மூலம் சுழற்தி முறையில் பிரித்தெடுப்பது குறித்த விரிவான வழிமுறைகள் இணையதளத்தில் உள்ளன.
தொடர்புடையது

பெரம்பலூா், குன்னம் தொகுதிக்கு வாக்குப் பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கணினிமூலம் குலுக்கல் முறையில் ஒதுக்கீடு

கணினி குலுக்கல் முறையில் தொகுதி வாரியாக வாக்குப்பதிவு இயந்திரங்கள் தெரிவு! 9 தொகுதிகளுக்கும் பாதுகாப்பாக அனுப்ப ஏற்பாடு!

மாா்ச் 23-இல் குலுக்கல் முறையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


