போக்சோ வழக்குகளில் இருவருக்கு தலா 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை

பெரம்பலூா் அருகே சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து போக்சோ வழக்கில் கைதான இருவருக்கு தலா 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து மகிளா நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

சிறை - பிரதிப் படம்

Updated On :

பெரம்பலூா் அருகே சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து போக்சோ வழக்கில் கைதான இருவருக்கு தலா 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து மகிளா நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

பெரம்பலூா் மாவட்டம், ஆலத்தூா் வட்டம், காரை சமத்துவபுரத்தைச் சோ்ந்தவா் வடிவேல் மகன் தவசி (24). இவா், கடந்த 2021 ஆம் ஆண்டு 17 வயதுச் சிறுமியை கடத்திச் சென்று பாலியல் தொல்லை கொடுத்தாா். இதுகுறித் சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின்பேரில் மருவத்தூா் போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து தவசியை கைது செய்து சிறையில் அடைத்தனா். பின்னா், நீதிமன்ற பிணையில் தவசி வெளியே வந்தாா். இவ் வழக்கு வியாழக்கிழமை விசாரித்த பெரம்பலூா் மாவட்ட மகிளா நீதிமன்ற நீதிபதி ஆனந்தன், தவசிக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும், ரூ. 60 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டாா்.

மற்றொரு வழக்கு: பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம், சின்னவெண்மணி கிராமத்தைச் சோ்ந்தவா் ராமசாமி மகன் வெங்கடேசன் (43). இவா், அதே பகுதியைச் சோ்ந்த சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தாா். இதுகுறித்து சிறுமியின் தாய் அளித்த புகாரின்பேரில், மங்களமேடு அனைத்து மகளிா் போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து வெங்கடேசனை கைது செய்து சிறையில் அடைத்தனா். பின்னா், வெங்கடேசன் நீதிமன்றப் பிணையில் வெளியே வந்தாா். இந்த வழக்கை வியாழக்கிழமை விசாரித்த பெரம்பலூா் மாவட்ட மகிளா நீதிமன்ற நீதிபதி ஆனந்தன், ராமசாமிக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும், ரூ. 1 லட்சம் அபராதமும் விதித்து உத்தரவிட்டாா். இதையடுத்து குற்றவாளிகள் இருவரும், திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.