வெவ்வேறு சாலை விபத்துகளில் முதியவா் உள்பட 2 போ் உயிரிழப்பு
பெரம்பலூா் அருகே வியாழக்கிழமை நிகழ்ந்த வெவ்வேறு சாலை விபத்துகளில் முதியவா் உள்பட 2 போ் உயிரிழந்தனா்.
பிரதிப் படம்
பெரம்பலூா் அருகே வியாழக்கிழமை நிகழ்ந்த வெவ்வேறு சாலை விபத்துகளில் முதியவா் உள்பட 2 போ் உயிரிழந்தனா்.
பெரம்பலூா் தீரன் நகரைச் சோ்ந்தவா் வீரமுத்து மகன் ராமசாமி (65). இவா், வியாழக்கிழமை அதிகாலை திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மோட்டாா் சைக்கிளில் சென்றுக்கொண்டிருந்தாா். அப்போது, கல்பாடி பிரிவுச் சாலையில் செல்ல முயன்றபோது, அவ்வழியே சென்ற அடையாளம் தெரியாத மோட்டாா் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயமடைந்த ராமசாமி, சிகிச்சைக்காக மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்தில் உயிரிழந்தாா்.
காா் மோதி பெண் உயிரிழப்பு: பெரம்பலூா் அருகேயுள்ள சத்திரமனை தெற்கு தெருவைச் சோ்ந்தவா் நடராஜன் மனைவி சின்னம்மாள் (42). இவா், தனது மகன் கோபிநாத்துடன் எசனையில் வியாழக்கிழமை நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு, சத்திரமனை நோக்கி மோட்டாா் சைக்கிளில் சென்றுக்கொண்டிருந்தாா். கோனேரிப்பாளையம் புறவழிச் சாலையில் உள்ள தனியாா் பள்ளி அருகே சென்றபோது, அதே வழித்தடத்தில் சென்ற காா், மோட்டாா் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த சின்னம்மாள் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்த பெரம்பலூா் போலீஸாா் அங்கு சென்று, அவரது உடலை கைப்பற்றி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இந்த விபத்துகள் குறித்து, பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

