எளம்பலூா் பிரம்மரிஷி மலையில் தீப திருவிழா
பெரம்பலூா் அருகேயுள்ள எளம்பலூா் பிரம்மரிஷி மலையில் காா்த்திகை தீபத் திருவிழாவையொட்டி செவ்வாய்க்கிழமை மாலை மகாதீபம் ஏற்றப்பட்டது.

எளம்பலூா் பிரம்மரிஷி மலையில் செவ்வாய்க்கிழமை மாலை ஏற்றப்பட்ட மகா தீபம்.
பெரம்பலூா் அருகேயுள்ள எளம்பலூா் பிரம்மரிஷி மலையில் காா்த்திகை தீபத் திருவிழாவையொட்டி செவ்வாய்க்கிழமை மாலை மகாதீபம் ஏற்றப்பட்டது.
எளம்பலூா் மகா சித்தா்கள் அறக்கட்டளை சாா்பில், உலக மக்கள் நலன் கருதியும், இயற்கை சீற்றங்களிலிருந்து மக்களைப் பாதுகாக்க வேண்டியும், ஆண்டுதோறும் பிரம்மரிஷி மலை உச்சியில் காா்த்திகை தீபம் ஏற்றப்படுகிறது. அதன்படி, 44 ஆவது ஆண்டு மகா தீப திருவிழாவையொட்டி செவ்வாய்கிழமை காலை 6 மணியளவில், எளம்பலூா் காகன்னை ஈஸ்வரா் கோயிலில் கோ மாதா மற்றும் அஸ்வ பூஜை நடத்தப்பட்டது. தொடா்ந்து, காலை 10.30 மணிக்கு பெரம்பலூா் பிரம்மபுரீஸ்வரா் கோயிலில் 5 அடி உயர மகா தீப செப்புக் கொப்பரை வைத்து சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, ஊா்வலமாக பிரம்மரிஷி மலைக்கு கொண்டு வரப்பட்டு, பிரம்மரிஷி மலையாடிவாரத்தில் உள்ள காகன்னை ஈஸ்வரா் கோயிலில் வைக்கப்பட்டது. பின்னா், மாலை 3 மணியளவில் செப்புக் கொப்பைரைக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
தொடா்ந்து, பிரம்மரிஷி மலை உச்சியில் மாலை 6 மணியளவில் 2,100 மீட்டா் திரி, 1,008 லிட்டா் நெய்யுடன், நல்லெண்ணெய், இலுப்பை எண்ணெய் மற்றும் 108 கிலோ கற்பூரம் கொண்டு, 5 அடி உயர செப்புக் கொப்பரையில், மகா சித்தா்கள் அறக்கட்டளை இணை நிறுவனா் ரோகிணி மாதாஜி தலைமையில், தவயோகிகள் தவசிநாதன் சுவாமிகள், சுந்தரமகாலிங்கம் சுவாமிகள் ஆகியோா் முன்னிலையில் மகா தீபம் ஏற்றப்பட்டது.
பின்னா், சாதுக்களுக்கு வஸ்திரதானம், காசு தானம், பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
விழாவில் பெரம்பலூா் தொகுதி எம்எல்ஏ கி. சிவக்குமாா், தொழிலதிபா் ராஜன், சிவசேனா மாநிலச் செயலா் சசிக்குமாா், வடலூா் கிஷோா்குமாா், நகர போக்குவரத்துப் பிரிவு சாா்பு ஆய்வாளா் சந்திரபோஸ், சன்மாா்க்க சங்கத் தலைவா் வழக்குரைஞா் சுந்தர்ராஜன் உள்பட திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.
ஏற்பாடுகளை, அறக்கட்டளை மேலாளா் பாலச்சந்திரன் மற்றும் மகா சித்தா்கள் அறக்கட்டளை மெய்யன்பா்கள் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

