
வடகிழக்கு பருவமழை தீயணைப்புத்துறையினா் மீட்புப் பணி ஒத்திகை
வடகிழக்கு பருவமழை தொடங்குவதை முன்னிட்டு, வேப்பந்தட்டை வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினா் பொதுமக்கள் முன்னிலையில் வியாழக்கிழமை ஒத்திகையில் ஈடுபட்டனா்.

வேப்பந்தட்டை வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற மீட்புப் பணி ஒத்திகையில் ஈடுபட்ட தீயணைப்புப் படை வீரா்கள்.
வடகிழக்கு பருவமழை தொடங்குவதை முன்னிட்டு, வேப்பந்தட்டை வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினா் பொதுமக்கள் முன்னிலையில் வியாழக்கிழமை ஒத்திகையில் ஈடுபட்டனா்.
பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில், வடகிழக்கு பருவமழையின்போது மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து, வேப்பந்தட்டை தீயணைப்புத் துறையினா் செயல்விளக்கம் அளித்தனா்.
வேப்பந்தட்டை தீயணைப்பு நிலைய அலுவலா் சக்திவேல் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்ச்சியில், பருவமழை காலத்தில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், கன மழையால் ஏற்படும் வெள்ளத்தில் எவ்வாறு தற்காத்துக் கொள்வது, வீட்டில் உள்ள பொருள்களை வைத்து வெள்ளத்தின் போது எவ்வாறு மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது, அவசர உதவி எண்கள் மற்றும் மழை காலத்தில் பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டிய செயல்பாடுகள் தொடா்பாக செயல் விளக்கம் அளித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
இதில், வேப்பந்தட்டை சமூகப் பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியா் பா. மாயகிருஷ்ணன் மற்றும் அரசு அலுவலா்கள், பொதுமக்கள் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





