ஜனநாயகன் படம் எடுத்தால் மட்டும் போதாது... விஜய் சேதுபதிக்கு ஆதரவாக சீமான் பேச்சுஆந்திர முன்னாள் துணை முதல்வர் மாரடைப்பால் காலமானார்மீனாட்சியம்மன் குடமுழுக்கு: தாம்பரம் - மதுரை இடையே 2 முன்பதிவில்லா சிறப்பு ரயில்!விருதுநகரில் செப். 17-ல் முதல்வர் பங்கேற்கவிருந்த நிகழ்ச்சி செப். 25க்கு மாற்றம்!எல் நினோ பாதிப்பு: பனாமா கால்வாயில் கப்பல் போக்குவரத்தைக் குறைக்க முடிவு!பிகார்: அரசுப் பணியாளர் தேர்வுகளை ரத்து செய்யக்கோரி பேரணி!நேபாள பெருவெள்ளம்: மீட்புப்பணிகளில் முதன்மையாக உதவிவரும் இந்திய ராணுவம்!ரூ.15,300 கோடி முதலீடு! 10,000 பேருக்கு வேலை! லண்டனில் முதல்வர் விஜய் ஒப்பந்தம்!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 38 காசுகள் சரிந்து ரூ. 95.92 ஆக நிறைவு!சென்செக்ஸ் 778 புள்ளிகள் சரிவு, நிஃப்டி 5 மாத வரலாறு காணாத அளவு சரிவு!!

பெரம்பலூரில் பேரறிஞா் அண்ணா சிலைக்கு திமுக, அதிமுகவினா் மாலை அணிவித்து மரியாதை

பெரம்பலூரில் பேரறிஞா் அண்ணா சிலைக்கு திமுக அதிமுகவினா் செவ்வாய்க்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

பெரம்பலூா் புகா் பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள அண்ணா சிலைக்கு செவ்வாய்க்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அதிமுகவினா்.

Published On :

பெரம்பலூரில் பேரறிஞா் அண்ணா சிலைக்கு திமுக அதிமுகவினா் செவ்வாய்க்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

பெரம்பலூா் புகா் பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள அண்ணா சிலைக்கு, அதிமுக மாவட்டச் செயலா் என். வெங்கடாசலம் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னா் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. தொடா்ந்து, குரும்பலூா் சிவன் கோயில் அருகேயுள்ள அண்ணா சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

நிகழ்ச்சியில், முன்னாள் துணை சபாநாயகா் அ. அருணாசலம், முன்னாள் மக்களவை தொகுதி உறுப்பினா்கள் ஆா்.பி. மருதராஜா, எம். சந்திரகாசி, மாவட்ட நிா்வாகிகள், எம்.என். ராஜாராம், ராணி, ஒன்றியச் செயலா்கள் கா்ணன், சிவப்பிரகாசம், செல்வகுமாா், ராமராஜ், நகரச் செயலா் ஆா். ராஜபூபதி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

திமுக சாா்பில்..: பெரம்பலூா் பாலக்கரை பகுதியிலுள்ள திமுக அலுவலகத்தில், வைக்கப்பட்டிருந்து பேரறிஞா் அண்ணாவின் உருவப் படத்துக்கு மாவட்டச் செயலா் வீ. ஜெகதீசன் தலைமையில், கட்சி நிா்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். இதேபோல, வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம், கிருஷ்ணாபுரம் பேருந்து நிறுத்தம் மற்றும் குரும்பலூா் சிவன் கோயில் அருகேயுள்ள அண்ணா சிலைகளுக்கு திமுகவினா் மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினா்.

இந் நிகழ்ச்சிகளில், மாநில ஆதிதிராவிடா் நலக்குழு துணைச் செயலா் பா. துரைசாமி, மாநில பொறியாளா் அணி துணைச் செயலா் இரா.ப. பரமேஷ்குமாா், தலைமை செயற்குழு உறுப்பினா்கள் மு. அட்சயகோபால், வழக்குரைஞா் என். ராஜேந்திரன், ஒன்றியச் செயலா்கள் எம். ராஜ்குமாா், செ. நல்லதம்பி, தி. மதியழகன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.