திருச்சி தென்னூர் பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி புதுக்கோட்டையில் பாறைக்குளத்தில் நீரில் மூழ்கி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.
திருச்சி தென்னூர் பகுதியைச் சேர்ந்த ராமலிங்கம் மகன் சத்தியசீலன்(27). இவர் காந்தி மார்கெட்டில் கூலித்தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில், தனது நண்பர்கள் 3 பேருடன் 2 மோட்டார் சைக்கிளில் புதுக்கோட்டையிலுள்ள நண்பரைப்பார்ப்பதற்காக சனிக்கிழமை வந்தனராம். இதையடுத்து திருக்கோகர்ணம் பகுதியில் உள்ள பாறைக்குளத்தில் குளிக்கச்சென்றபோது சத்தியசீலன் எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கினார்.. இது குறித்து திருக்கோகர்ணம் போலீஸாருக்கு தகவல் தெரிந்தபின் தீயணைப்புத்துறையினருடன் இணைந்து நீரில் மூழ்கியவரைத் தேடினர். ஏறத்தாழ 12 மணி நேர முயற்சிக்குப்பின் சத்தியசீலனின் பிரேதம் மீட்கப்பட்டது. இது குறிóத்து திருக்கோகர்ணம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








