கிணற்றுக்குள் விழுந்த பசு உயிருடன் மீட்பு
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே கிணற்றுக்குள் விழுந்த பசுவை தீயணைப்புத் துறையினர் ஞாயிற்றுக்கிழமை உயிருடன் மீட்டனர்.
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே கிணற்றுக்குள் விழுந்த பசுவை தீயணைப்புத் துறையினர் ஞாயிற்றுக்கிழமை உயிருடன் மீட்டனர்.
அன்னவாசல் அருகே உள்ள வேளம்பட்டி அந்தமான் தோட்டத்தைச் சேர்ந்தவர் இளங்கோ. இவருக்கு சொந்தமான பசு சனிக்கிழமை முதல் காணவில்லையாம். இதையடுத்து இளங்கோ தனது பசுவை பல இடங்களில் தேடி வந்தார்.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை அவரது தோட்டத்து கிணற்றுக்குள் இருந்து பசு கத்தும் சப்தம் கேட்டது. இதைத்தொடர்ந்து அங்கு சென்று இளங்கோ பார்த்த போது பசு சுமார் 50 அடி ஆழ கிணற்றுக்குள் விழுந்தது தெரியவந்தது. இதையடுத்து தகவலறிந்து வந்த இலுப்பூர் தீயணைப்பு நிலைய அலுவலர் சி. காமராஜ் தலைமையிலான மீட்புப் படையினர் சுமார் 2 மணி நேர போராட்டத்துக்கு பின் பசுவை உயிருடன் மீட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

