ஆலங்குடி அருகே மர்மக் காய்ச்சலுக்கு சிறுவன் சாவு
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற சிறுவன் வியாழக்கிழமை உயிரிழந்தார்.


புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற சிறுவன் வியாழக்கிழமை உயிரிழந்தார்.
ஆலங்குடி அருகேயுள்ள குலமங்களம் தெற்கு கிராமத்தைச் சேர்ந்த சுந்தரராசு மகன் கருப்பையா(14). அப்பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு பயின்றுவந்த இவருக்கு, கடந்த வாரம் காய்ச்சல் ஏற்பட்டு, புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளார்.
காய்ச்சலின் தீவிரம் குறையாததால், மேல்சிகிச்சைக்காக நவம்பர் 9 ஆம் தேதி தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி சேர்த்துள்ளனர். அங்கு சிகிச்சை பெற்றுவந்த கருப்பையா வியாழக்கிழமை மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...