பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

பைக் மீது கார் மோதல்: தொழிலாளி சாவு

விராலிமலை அருகே புதன்கிழமை நேரிட்ட சாலைவிபத்தில் கூலித் தொழிலாளி உயிரிழந்தார்.

News image
Updated On :20 அக்டோபர் 2017, 2:06 am

DIN

விராலிமலை அருகே புதன்கிழமை நேரிட்ட சாலைவிபத்தில் கூலித் தொழிலாளி உயிரிழந்தார்.
விராலிமலை அருகேயுள்ள வெள்ளக்கல்பட்டியைச் சேர்ந்த ஆ. தங்கராஜ்(50). கூலித்தொழிலாளியான இவர், கடந்த புதன்கிழமை தனது இருசக்கர வாகனத்தில் கொடும்பாளூர் - மணப்பாறை பிரிவு சாலையைக் கடக்க முற்பட்டுள்ளார். அப்போது மதுரையிலிருந்து திருச்சி சென்ற கார், இருசக்கரவாகனம் மீது மோதியது. இதில் தலையில் பலத்த காயமடைந்த தங்கராஜ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து விராலிமலை போலீஸார் வழக்கு பதிந்து கார் ஓட்டுநர் மதுரையைச் சேர்ந்த வி. அச்சுநாராயணனை(25) கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.