புதுக்கோட்டையில் வயி.சண்முகம் பிள்ளை ஜுவல்லர்ஸ் புதிய கடை திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. இதில், திரைப்பட நடிகை மஞ்சிமா மோகன் பங்கேற்றார்.
புதுக்கோட்டை கீழராஜ வீதியில் வயி.சண்முகம் பிள்ளை ஜுவல்லர்ஸ் உள்ளது. 78 ஆண்டுகள் பாரம்பரியமிக்க இந்தக் கடையின் அருகே பிரமாண்ட கட்டடம் எழுப்பி, தங்கம், வெள்ளி, வைரம், ஆண்டிக் நகைகளுக்கென தனிப்பிரிவு ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. புதன்கிழமை நடைபெற்ற திறப்பு விழாவில் திரைப்பட நடிகை மஞ்சிமா மோகன் கலந்து கொண்டார். நடிகையின் வருகையால் வாடிக்கையாளர்கள், பொதுமக்கள் உற்சாகமடைந்தனர்.
புதிய கடையை மங்கையர்கரசி வெங்கடாசலம், ரூபிணி ராகுல் ஆகியோர் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தனர். திறப்பு விழாவைத் தொடர்ந்து, வெள்ளி, தங்கம், வைரம், ஆண்டிக் நகைகளுக்கென ஏற்படுத்தப்பட்டுள்ள பிரத்யேக பிரிவில் சிறப்புத் தள்ளுபடி விற்பனை நடைபெற்றது. அதில், நகைகள் வாங்கிய வாடிக்கையாளர்களுக்கு தங்கத்திற்கு நிகரான வெள்ளி இலவசமாக வழங்கப்பட்டது. மேலும், புதன்கிழமை முதல் ஆண்டிக், வைர நகைகளின் கண்காட்சி நடைபெறுகிறது. ஏற்பாடுகளை கடையின் உரிமையாளர்கள் வெங்கடாசலம், ராகுல் வெங்கடாசலம் ஆகியோர் செய்திருந்தனர். வாடிக்கையாளர்கள், பொதுமக்கள், முக்கியப் பிரமுகர்கள் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சமாதானத் தூதராக உருவெடுத்துள்ளது பாகிஸ்தான்: ஷெபாஸ் ஷெரீஃப் பெருமிதம்!

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதிரடியாக விளையாட வேண்டும்: ஸ்மிருதி மந்தனா

நெல்லையப்பர் கோயில் ஆனித் தேரோட்டம்: பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அமைச்சர் ரமேஷ் ஆய்வு!





