திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

தொழுநோயாளிகளுக்கான ஊன தடுப்பு முகாம்

காரையூர் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பாக பொன்னமராவதி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில்

Updated On :18 ஏப்ரல் 2018, 9:27 am IST

காரையூர் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பாக பொன்னமராவதி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தொழுநோயாளிகளுக்கான ஊன தடுப்பு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
முகாமிற்கு, வட்டார மருத்துவ அலுவலர் இ. அருள்மணி நாகராஜன் தலைமை வகித்தார். துணை இயக்குநர் (தொழுநோய்) சாமியப்பன் தொழுநோயாளிகளுக்கு ஊன தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு கருத்துகள் வழங்கிப் பேசினார். 
முகாமில், தொழுநோயாளிகளுக்கு மூக்கு கண்ணாடி, காலணிகள், போர்வைகள், ரண சிகிச்சைக்கான மருத்துவ பெட்டகம் உள்ளிட்டவை வழங்கப்பட்டது. 
மேலும் டாமியன் பவுண்டேசன் சார்பில் கால் புண்கள் பராமரிப்பு குறித்த பயிற்சி வழங்கப்பட்டது. மேலும் அனைத்து தொழுநோயாளிகளுக்கும் உணவு வழங்கப்பட்டது. மருத்துவ அலுவலர்கள், நலக்கல்வியாளர்கள், மருத்துவம் அல்லா மேற்பார்வையாளர்கள், வட்டார சுகாதார மேற்பார்வையாளர்கள், சுகாதார ஆய்வாளர்கள், கிராம சுகாதார செவிலியர்கள் பங்கேற்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.