புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே திங்கள்கிழமை அதிகாலை வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த ரு. 6 ஆயிரம் பணம், பெண்ணிடம் இருந்து 8 பவுன் தங்கச் செயின் ஆகியவற்றை மர்மநபர் திருடியுள்ளார்.
அறந்தாங்கி அருகே காரணியேந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் குத்புதீன். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ஜெய்லா பீவி (45) மகன் , மருமகள் மற்றும் பேரக் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இந்நிலையில், திங்கள்கிழமை அதிகாலை வீட்டில் மின்தடை ஏற்பட்டபோது, ஏதோ சப்தம் கேட்டதையடுத்து, ஜெய்லா பீவி எழுந்து வந்து பார்த்தாராம். அப்போது, கதவின் பின்புறம் மறைந்திருந்த மர்மநபர், அவர் அணிந்திருந்த 8 பவுன் தங்கச்சங்கிலியை அறுத்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டார். அவரது அலறல் கேட்டு எழுந்து வந்த மற்றவர்கள், வீட்டின் பீரோ உடைக்கப்பட்டு, அதில் இருந்த ரூ. 6 ஆயிரம் ரொக்கம் திருட்டு போயிருப்பதும் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இதையடுத்து, ஜெய்லாபீவி அளித்த புகாரின்பேரில், போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
குருவாயூர் கோயிலில் கேரள முதல்வருக்கு உயர் நீதிமன்ற உத்தரவை மீறி சிறப்பு அனுமதி: பாஜக புகார்

இறுதிச் சுற்றுக்கு முன்னேறப்போவது யார்?: ஆர்சிபி vs குஜராத் | குவாலிஃபையர் 1 Preview |

பத்ம ஸ்ரீ பெற்றுக்கொண்ட எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி! - முழுப் பட்டியல்






