பொன்னமராவதி வலையபட்டி அரசு பாப்பாயி மருத்துவமனையில் புதன்கிழமை தாய்ப்பால் தினம் கொண்டாடப்பட்டது.
வலையபட்டி அரசு பாப்பாயி மருத்துவமனை மற்றும் பொன்னமராவதி சிட்டி அரிமா சங்கம் சார்பில் நடைபெற்ற நிகழ்வில் மருத்துவமனையில் உள்ள தாய்மார்களுக்கு ரொட்டி மற்றும் பழங்கள் வழங்கப்பட்டது.
மருத்துவர்கள் சரவணன், மேனகா, ஜனனிப் பிரியா ஆகியோர் தாய்ப்பாலின் மகத்துவம், நன்மைகளைத் தாய்மார்களிடம் விளக்கினர். சிட்டி அரிமா சங்கத் தலைவர் ஜெ. பிரவீன் குமார், பொருளாளர் அ. சையது அபுதாஹிர், நிர்வாகிகள் விகே.செல்வம், சுனில்ராஜ், சண்முகம் மற்றும் செவிலியர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மருத்துவர் ஆர்த்தி நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








