போராட்டக்காரர்களுக்கு ஜந்தர் மந்தர் மூடப்பட்டால் நாடு தழுவிய போராட்டம் வெடிக்கும்: சிஜேபிடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 40 காசுகள் உயர்ந்து ரூ. 95.38 ஆக நிறைவு!பங்குச் சந்தை மீட்சி: சென்செக்ஸ் 1,109 புள்ளிகளுடனும், நிஃப்டி 359 புள்ளிகளுடன் நிறைவு!மத்திய அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்வதாக எல். முருகன் அறிவிப்பு!தவெக ஆட்சியில் பணவீக்கம், விலைவாசி உயர்வில் தமிழ்நாடு முதலிடம்: மு.க. ஸ்டாலின் கடும் தாக்கு!காஞ்சிபுரத்தில் இந்தியாவிலேயே சிறந்த புற்றுநோய் சிகிச்சை மையம்! ஜனவரியில் திறந்து வைக்கிறார் முதல்வர்!ஆந்திரம் சென்றார் முதல்வர் விஜய்! உற்சாக வரவேற்பு!தமிழ்நாடு முழுவதும் ரேஷன் கடை ஊழியர்கள் நாளை வேலைநிறுத்தம்!ஜெயிலர் 2 படத்தை சட்டவிரோதமாக வெளியிட தடை ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ. 700 தீபாவளி மளிகை தொகுப்பு! புதுவை அரசு

மாநில துப்பாக்கி சுடும் போட்டி: புதுகை அணி சாம்பியன்

புதுக்கோட்டையில் மாநில அளவில் நடைபெற்ற துப்பாக்கி சுடும் போட்டியில் புதுக்கோட்டை ராயல் ஸ்போர்ட்ஸ் கிளப் அணியினர் சாம்பியன் பட்டத்தை ஞாயிற்றுக்கிழமை கைப்பற்றினர். 

Published On :

புதுக்கோட்டையில் மாநில அளவில் நடைபெற்ற துப்பாக்கி சுடும் போட்டியில் புதுக்கோட்டை ராயல் ஸ்போர்ட்ஸ் கிளப் அணியினர் சாம்பியன் பட்டத்தை ஞாயிற்றுக்கிழமை கைப்பற்றினர். 
 புதுக்கோட்டை அருகேயுள்ள ஆவாரங்குடிபட்டியில் உள்ள துப்பாக்கி சுடும் பயிற்சி தளத்தில் புதுக்கோட்டை ஸ்போர்ட்ஸ் கிளப், தமிழ்நாடு துப்பாக்கி சுடுவோர் சங்கம் இணைந்து நடத்திய 44 ஆவது  மாநில அளிவிலான சாட்கன் துப்பாக்கி சுடுதல் போட்டி ஆக. 2 ஆம் தேதி தொடங்கி ஆக.5 ஆம் தேதி வரை  நடைபெற்றது.
 இதில், சென்னை, மதுரை, நாகை, பாண்டிச்சேரி, தூத்துக்குடி, சேலம், புதுக்கோட்டை உள்ளிட்ட  இடங்களில் இருந்து  ரைபிள் கிளப் வீரர், வீராங்கனைகள் பலர் கலந்து கொண்டனர். இதில், டபுள் டிராப் போட்டிகள், ஸ்கீத் போட்டிகள், சிங்கிள் டிராப் போட்டிகள் நடைபெற்றன. சிங்கிள் டிராப், ஸ்கீத் பிரிவு ஆகிய 2 பிரிவுகளிலும் அதிக புள்ளிகளை பெற்று ராயல் புதுக்கோட்டை ஸ்போர்ட்ஸ் கிளப் சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது. ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தையும் ராயல் புதுக்கோட்டை ஸ்போர்ட்ஸ் கிளப் தட்டிச் சென்றது. டபுள் டிராப் போட்டிகளில் அதிக புள்ளிகள் பெற்று கோவை ரைபிள் கிளப் சாம்பியன் பட்டத்தை பெற்றது. போட்டிகள் முடிந்ததும் பரிசளிப்பு விழா நடைபெற்றது. 
 விழாவில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.செல்வராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் அ.ராமசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்கள் வழங்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.