இயக்குநர் பாக்யராஜுக்கு நாளை காலை இறுதிச் சடங்கு!கே. பாக்யராஜ் உடலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி நேரில் அஞ்சலி! தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம்!கே. பாக்யராஜுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! சாந்தனுவை ஆரத்தழுவி ஆறுதல்!!திமுக கூட்டணியிலிருந்து மதிமுக விலகல்!
/

பிளாஸ்டிக் மாசில்லா அறந்தாங்கி: விழிப்புணர்வு கருத்தரங்கம்

அறந்தாங்கி நகராட்சி சார்பில் ஜனவரி 1 முதல் பிஸாஸ்டிக் மாசில்லா அறந்தாங்கி நகரம் எனும் விழிப்புணர்வு கருத்தரங்கம் திங்கள் கிழமை நடைபெற்றது.

Updated On :25 டிசம்பர் 2018, 9:39 am IST

அறந்தாங்கி நகராட்சி சார்பில் ஜனவரி 1 முதல் பிஸாஸ்டிக் மாசில்லா அறந்தாங்கி நகரம் எனும் விழிப்புணர்வு கருத்தரங்கம் திங்கள் கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு  நகராட்சி ஆணையர் நை.மீராஅலி தலைமை வகித்தார். நகராட்சி துப்புரவு அலுவலர்  த.முத்துகணேஷ், துப்புரவு ஆய்வாளர் சி.சேகர் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.  நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட புதுக்கோட்டை மாவட்ட சுற்றுச்சூழல்  பொறியாளர் கே.காமராஜ் பேசியது: 
மனித குலம் மற்றும் உயிர்வாழ் உயிரினங்கள் அனைத்திற்கும் தீங்கு விளைவிக்கும் பிஸாஸ்டிக்கை ஜனவரி 1 முதல் தமிழக அரசு தடை செய்துள்ளது. பொதுமக்களும், வணிகர்களும் இதற்கு ஒத்துழைப்பு நல்கினால் மட்டுமே 100 சதவீதம் வெற்றியடைய முடியும். முதற்கட்டமாக பிளாஸ்டிக் பொருள்களைத் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு உற்பத்தியை நிறுத்துமாறு ஆணை வழங்கப்பட்டு விட்டது.  அடுத்தப்படியாக பிளாஸ்டிக் பொருள்களை சேமித்து விற்பனை செய்யும் நிறுவனங்கள் கண்டறியப்பட்டு விற்பனையை நிறுத்த  அறிவுறுத்தப்பட்டுள்ளது. 
மேலும், பொதுமக்கள் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை வைத்திருந்தால் அபராதம் விதிக்கப்படும் என்றார்.
கூட்டத்தில், வர்த்தக சங்கத் தலைவர் பா.வரதராஜன், ரோட்டரி சங்கத் தலைவர் அ. அபுதாலிப், தி போர்ட் சிட்டி ரோட்டரி சங்கத் தலைவர் கவி.கார்த்திக்,  தனியார் பள்ளிகளின் நிர்வாகி கே. சுரேஷ் குமார் மற்றும் சாலையோர வியாபாரிகள்,  உணவக உரிமையாளர்கள், திருமண மண்டபம், அனைத்து தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் கலந்து கொண்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.