கந்தர்வகோட்டை வட்டம், தச்சங்குறிச்சி புனித அடைக்கல மாதா கோயில் திருவிழாவை முன்னிட்டு ஜனவரி 2 ஆம் தேதி ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளது.
கடந்த ஆண்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் முதல் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியாக தச்சங்குறிச்சி கிராமத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை மாவட்ட ஆட்சியர், அமைச்சர் ஆகியோர் கலந்து கொண்டு ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்தனர். நிகழாண்டிலும் ஜன. 2 ஆம் தேதி புனித அடைக்கலமாதா கோயில் அருகே ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளது.
இதற்கு அரசு அனுமதி அளித்து அரசாணை வெளியிட்டு உள்ளது. தொடர்ந்து தச்சங்குறிச்சி கிராம பொது மக்கள் மற்றும் தென்போஸ்கோ இளைஞர் நற்பணி மன்றத்தினர் சார்பில் சுமார் ரூ.2 லட்சம் மதிப்பில் மரங்கள், கம்பிகள், பதாகைகள் கொண்டு வாடிவாசல், பார்வையாளர் அமரும் பகுதிகள் அமைக்கப்பட்டு வருகின்றன. மேலும், 800 ஜல்லிக்கட்டு காளைகள் மற்றும் 400 மாடுபிடி வீரர்களுக்கு இதுவரை அனுமதி டோக்கன் வழங்கப்பட்டுள்ளதாக ஜல்லிக்கட்டு விழாக் குழுவினர் மற்றும் கிராமத்தினர் தெரிவித்துள்ளார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
மனோன்மணியம் சுந்தரனாா் பல்கலை. பட்டமளிப்பு விழா: உயா்கல்வித் துறை அமைச்சா் புறக்கணிப்பு!
தொடரும் அமளி! நாடாளுமன்றம் 7-வது நாளாக முடங்கியது!

இன்றைய செய்திகள் ஜூலை 28 - நேரலை

இலங்கை டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு! முதல்முறையாக 33 வயது ஆல்-ரவுண்டருக்கு வாய்ப்பு!
விடியோக்கள்

படம் எடுக்கறதுல அவ்வளவு பிரச்னை: இயக்குநர் மீரா கதிரவன் ஆதங்கம் | Meera https://youtu.be/dfsNuHp09F0


