சுமை ஆட்டோ மோதி இளைஞர் சாவு

புதுக்கோட்டை அருகே உள்ள குப்படையான்பட்டியைச் சேர்ந்தவர் சிவக்குமார்(35). இவர், புதுகைக்குச் சென்றுவிட்டு சனிக்கிழமை இரவு மோட்டார் சைக்கிளில்
Updated on
1 min read

புதுக்கோட்டை அருகே உள்ள குப்படையான்பட்டியைச் சேர்ந்தவர் சிவக்குமார்(35). இவர், புதுகைக்குச் சென்றுவிட்டு சனிக்கிழமை இரவு மோட்டார் சைக்கிளில் ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது இச்சடி அருகே எதிரே வந்த சுமை ஆட்டோ மோதியதில்  நிகழ்விடத்திலே சிவக்குமார் உயிரிழந்தார்.
 தகவலறிந்து சென்ற 108 வாகனம் சிவக்குமார் இறந்துவிட்டதால் உடலை  ஏற்க மறுத்து திரும்பியதாம்.  மேலும், அப்பகுதியில், சாலை வளைவுகளில் சமிக்ஞை, முன் எச்சரிக்கை பதாகைகள்  ஏதும் இல்லையாம். இதைக்கண்டித்து சிவக்குமாரின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு சென்ற ஆலங்குடி காவல் துணை கண்காணிப்பாளர் முத்தலீப் பேச்சுவார்த்தை நடத்தியதில் மறியல் கைவிடப்பட்டது. விபத்து குறித்து செம்பட்டிவிடுதி போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். இதனால் புதுகை - தஞ்சை சாலையில் சுமார் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com