சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

புதிய வகுப்பறை திறப்பு

பொன்னமராவதி அருகேயுள்ள ஒலியமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் புதிதாகக் கட்டப்பட்ட  2 வகுப்பறைக் கட்டடத் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :22 பிப்ரவரி 2018, 4:51 am

DIN

பொன்னமராவதி அருகேயுள்ள ஒலியமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் புதிதாகக் கட்டப்பட்ட  2 வகுப்பறைக் கட்டடத் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.
மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் எம். குணசேகரன் தலைமை வகித்து மாவட்ட ஆட்சியரின் அனுமதியின் பேரில் ஊரக வளர்ச்சித்துறை மற்றும் ஊராட்சித்துறை சார்பில் சிஎஸ்.ஐடிஎஸ் திட்டத்தின் கீழ் பள்ளியில் ரூ 11.80 லட்சத்தில்  கட்டப்பட்ட கட்டடங்களை திறந்துவைத்தார். 
பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் ராஜேஸ்வரி, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் சுப்பையா உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். உதவித் தொடக்க கல்வி அலுவலர் சே. ராமதிலகம், கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலர் ச.லதாதேவி ஆகியோர் வாழ்த்தினர். ஏற்பாடுகளை ஆசிரியர்கள் கே. பழனியாண்டி, கவிதா ஆகியோர் செய்தனர்.   பள்ளி தலைமையாசிரியர் சி. ஜெயலெட்சுமி வரவேற்றார். ஆசிரியர் ஞானகுருசாமி நன்றி கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.