அறந்தாங்கியில் அரசு மாணவியர் விடுதி மாடியில் சனிக்கிழமை இரவு ஏறிய அடையாளம் தெரியாத இளைஞர் தப்பியோடினார்.
அறந்தாங்கி-பேராவூரணி சாலையில் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் பின்புறம் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் அரசு மாணவியர் விடுதி உள்ளது. இந்த விடுதியில் 30 மாணவியர் தங்கி படித்து வருகின்றனர். சனிக்கிழமை இரவு 30 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத இளைஞர் அரை நிர்வாணக் கோலத்தில் மாடியில் நின்றிருந்ததைக் கண்ட மாணவிகள் கூச்சலிட்டனர்.
விடுதி வார்டன் குணவதி, அறந்தாங்கி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார். காவல் உதவி ஆய்வாளர் எஸ்.குணசேகரன் தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்றதைக் கண்ட இளைஞர் குடிநீர் குழாய் மூலம் இறங்கி தப்பியோடினார். அவரைத் தேடும் பணியில் போலீஸார் ஈடுபட்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







