குழந்தைகள்  பாதுகாப்புக்குழு  கூட்டம்

பொன்னமராவதி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு தொடர்பான ஒன்றிய அளவிலான குழந்தைகள் பாதுகாப்புக் குழு கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
Updated on
1 min read

பொன்னமராவதி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு தொடர்பான ஒன்றிய அளவிலான குழந்தைகள் பாதுகாப்புக் குழு கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
வட்டாரவளர்ச்சி அலுவலர் ஸ்ரீஜெயந்திதேவி தலைமை வகித்தார். கூட்டத்தில் குழந்தை திருமணம் தடுத்தல், குழந்தை தத்து எடுத்தல், குழந்தை தொழிலாளர் முறை ஒழித்தல், பாலியல் வன்கொடுமை தடுத்தல், தெருவோர குழந்தைகளை மீட்டெடுத்தல், பள்ளி செல்லா குழந்தைகளை மீட்டெடுத்து மறுவாழ்வு அளித்தல் குறித்து விவாதிக்கப்பட்டது. துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பாலசுப்பிரமணியன், குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் எம். தனபால், ஊர் நல அலுவலர்கள் விஜயலெட்சுமி, கமலம், குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் சி.சரசு, சைல்டுலைன் பணியாளர் பூங்கொடி, களப்பணியாளர்கள் உஷா, வெள்ளையம்மாள், கவிதா, பிரியா, சித்ரா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com