வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

ஆவுடையார்கோவிலில் சட்ட விழிப்புணர்வு முகாம்

ஆவுடையார்கோவிலில் சட்ட விழிப்புணர்வு முகாம் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.

News image
Updated On :1 மார்ச் 2018, 3:09 am

DIN

ஆவுடையார்கோவிலில் சட்ட விழிப்புணர்வு முகாம் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்ட  சட்டப் பணிகள் ஆணைக் குழு நடத்திய  முகாமுக்கு  மாவட்ட அமர்வு நீதிபதி மற்றும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுத் தலைவர் டி.வி. தமிழ்ச்செல்வி  தலைமை வகித்தார்.புதுக்கோட்டை தலைமை நீதித்துறை நடுவரும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலருமான எஸ். நாகராஜன் முன்னிலை வகித்தார். அறந்தாங்கி சார்பு நீதிபதி அ. ராபின்சன் ஜார்ஜ் சட்டக் கருத்துரை வழங்கினார். முகாமில்  புதுக்கோட்டை, அறந்தாங்கி வழக்குரைஞர்கள்  சட்டக் கருத்துகளை வழங்கினர். அரசின் நலத்திட்டங்கள் வழங்கப்பட்டன.  வருவாய், சமூக நலத்துறை, ஊராட்சி ஒன்றிய நிர்வாகிகள் பங்கேற்றனர். ஆவுடையார்கோவில் செயின் ஜோசப் மேல்நிலைப் பள்ளித் தாளாளர் சி. இருதயராஜ் வரவேற்றார். மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு  முதுநிலை நிர்வாக உதவியாளர் எஸ். தங்கராஜ்  மாரியப்பன் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.