அறந்தாங்கியில் சுதந்திரப் போராட்ட தியாகிகள் நினைவு பேரணி மற்றும் பொதுக்கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் சுதந்திர போராட்ட தியாகிகள் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் நினைவை போற்றும் வகையில் நடைபெற்ற தியாகிகள் நினைவு பேரணிக்கு இயக்கத்தின் மாவட்டத் தலைவர் ஜி.பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் வி.ஜெயராமன் முன்னிலை வகித்தார். மாவட்டச் செயலாளர் துரை.நாராயணன் தொடக்கி வைத்த பேரணியில் புதுக்கோட்டை மாவட்டத்தில் கிடைக்கும் கனிம வளம் மற்றும் இயற்கை வளங்களை பயன்படுத்து தொழிற்சாலைகளை தொடங்க வேண்டும், துப்புரவு பணி முதல் துணைவேந்தர் பணி வரை எங்கும் லஞ்சம் என்ற நிலையை நீக்க வேண்டும், விவசாயிகள் தற்கொலை சம்பவங்களை முடிவுக்கு கொண்டுவர வேண்டும். 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு என்ற மோடியின் கோஷம் என்னவாயிற்று உள்ளிட்ட கோஷங்களை எழுப்பியபடி நடைபெற்ற பேரணி சோதனை சாவடியில் தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக பேராவூரணி சாலை வரை நடைபெற்றது.
பின்னர் நடைபெற்ற கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன் சிறப்புரையாற்றினார், கூட்டத்தில் நகர செயலாளர் ஆர்.கர்ணா, ஒன்றிய பொருளாளர் எஸ்.கோபாலகிருஷ்ணன், நிர்வாகிகள் ஆர்.சோலையப்பன், மாணவர் அமைப்பு செயலாளர் எஸ்.விக்கி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தில்லி கேபிடல்ஸுக்கு எதிராக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்!

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!

கேரளத்தில் பட்டாசு வெடித்து விபத்து: 12 பேர் பலி; 40 பேர் படுகாயம்

ஐசிசி தரவரிசையில் ஷஃபாலி வர்மா முன்னேற்றம்; சரிவை சந்தித்த ஸ்மிருதி மந்தனா!
வீடியோக்கள்

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

