புதுக்கோட்டை தையல் கூட்டுறவு சங்க தேர்தலில் முறைகேடாக பதவிகளை பெற முயற்சி நடைபெறுவதாக கூறி, வேட்பாளர்கள் புதன்கிழமை அந்த அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை மாவட்ட மகளிர் தையல் தொழில் கூட்டுறவு சங்கத்தின் 7 இயக்குநர் பதவிகளுக்காக அதிமுக சார்பில் 7 பேரும், திமுக சார்பில் 7, சிஐடியு சார்பில் 1 என 15 பேர் வேட்புமனு செய்துள்ளனர்.
ஆனால், அதிமுகவினர் அதிகாரிகளின் துணையோடு, முறைகேடாக பதவிகளை பெற முயற்சி செய்வதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டும் உரிய பதில் இல்லையாம். இதனால், புதுக்கோட்டை தையல் கூட்டுறவு சங்க அலுவலகம் அருகே சிஐடியுவின் மாவட்டத் தலைவர் செல்வராஜ், பொதுச்செயலாளர் முகமது அலிஜின்னா, திமுக நிர்வாகி எம்.எம்.பாலு உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, அவர்கள் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கர்நாடகத்தில் எச்5என்1 வைரஸ் தொற்றால் 44 மயில்கள் இறந்தன!

நான் ஒரு பம்பரம் சாம்பியன்: சஞ்சு சாம்சன்

ஷிவம் மாவிக்குப் பதிலாக சன்ரைசர்ஸ் ஹைதராபாதில் இணைந்த தமிழக வீரர்!

கொடைக்கானலில் வாகனங்களுக்கு 2 நாள் இலவச அனுமதி!
வீடியோக்கள்

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

