கந்தர்வகோட்டை அருகேயுள்ள அண்டனூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிக்கு புதன்கிழமை கட்சியினர் பூட்டு போட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த வங்கிக்கான கூட்டுறவு சங்கத் தேர்தலுக்காக கடந்த திங்கள்கிழமை தேர்தல் அதிகாரி ஸ்ரீநினிவாசனிடம் பல்வேறு அரசியல் கட்சியினர், சுயேச்சைகள் என மொத்தம் 66 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். புதன்கிழமை வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து, வேட்புமனு தாக்கல் செய்த வேட்பாளர்கள் அனைவரும் தொடக்க கூட்டுறவு வங்கி அலுவலகத்துக்கு சென்றபோது, வேட்புமனுக்கள் அனைத்தும் புதுக்கோட்டைக்கு எடுத்து செல்லப்பட்டதாக அலுவலர்கள் அலட்சியமாக பதிலளித்ததாக கூறப்படுகிறது.
இதனால், ஆத்திரமடைந்த தொடக்க கூட்டுறவு வங்கியை சேர்ந்த வாக்காளர் உறுப்பினர்கள் அண்டனூர், வெள்ளாளவிடுதி, நெப்புகை ஆகிய கிராமங்களை சேர்ந்தவர்கள் மற்றும் தி.மு.க. தெற்கு ஒன்றிய செயலாளர் பரமசிவம், வெள்ளாளவிடுதி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் முத்துகுமார், முன்னாள் ஒன்றியகுழு உறுப்பினர் முருகையன் அணியினர்
ஆகியோர் கூட்டுறவு தொடக்க வங்கிக்கு மறுப்பூட்டு போட்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த கந்தர்வகோட்டை காவல்ஆய்வாளர் மன்னர்மன்னன், வங்கிக்கு பூட்டுபோட்ட அனைவரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்னையின்றி கலைந்து செல்லும்படி கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் அனைவரும் கலைந்து சென்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கருகிய மிளகாய் செடிகள்: விவசாயிகள் கவலை

பாம்பன் சாலைப் பாலத்தில் வளா்ந்துள்ள கருவேல மரங்களை அகற்றக் கோரிக்கை

மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம்

ராமேசுவரத்தில் ரூ.1 கோடி மதிப்பிலான படகு தீயில் எரிந்து சேதம்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

