இலுப்பூர், பாக்குடி ஆகிய பகுதிகளில் உள்ள துணை மின் நிலையங்களில் செவ்வாய்க்கிழமை பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால், இலுப்பூர், ஆலத்தூர், பேயால், கிளிக்குடி, எண்ணை, தளுஞ்சி, வீரப்பட்டி, வெட்டுக்காடு, மலைக்குடிப்பட்டி, கொடும்பாலூர் ஆகிய பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 9.00 மணிமுதல் மாலை 5.30 மணிவரை மின் விநியோகம் இருக்காது.
மேலும், இருந்திரப்பட்டி, பாக்குடி, விளாப்பட்டி, புங்கினிபட்டி, பையூர், மாங்குடி,மருதம்பட்டி, ராப்பூசல், லெக்கனாப்பட்டி ஆகிய பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மின் விநியோகம் இருக்காது என இலுப்பூர் மின் வாரிய உதவி செயற்பொறியாளர் கா. ஆறுமுகம் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








