குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சாலையில் நாற்று நடும் போராட்டம் கைவிடப்பட்டது

கந்தர்வகோட்டையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சாலையை சீரமைக்கக் கோரி சாலையில் நாற்றுநடும்

Updated On :8 அக்டோபர் 2018, 8:46 am IST

கந்தர்வகோட்டையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சாலையை சீரமைக்கக் கோரி சாலையில் நாற்றுநடும் போராட்டம் ஞாயிற்றுக்கிழமை அதிகாரிகள் பேச்சுவார்த்தையால் கைவிடப்பட்டது.  
கந்தர்வகோட்டையில் இருந்து கறம்பக்குடி செல்லும் சாலை மிக மோசமான நிலையில் குண்டும்குழியுமாக உள்ளதை சீர் செய்ய வலியுறுத்தி, கடந்த ஜூன் 22 ஆம் தேதி மறியல் போராட்டம் நடத்தப்போவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்திருந்தது.  
அப்போது கந்தர்வகோட்டை வட்டாட்சியர் தலைமையில் சமாதானக் கூட்டம் நடைபெற்று 30 நாள்களுக்குள் சாலையை சீர் செய்து தருவதாக எழுத்துபூர்வமாக உறுதி அளித்து பல மாதங்களாகியும்  இந்தச் சாலையை செப்பனிட அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. அரசின் கவனக்குறைவைக் கண்டித்து சாலையை உடனே சீர் செய்துதரக்கோரி சாலையில் நாற்று நடும் போராட்டத்தை அறிவித்து கட்சியின் ஒன்றிய செயலாளர் உ . அரசப்பன் தலைமையில், மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் எஸ் . ராஜேந்திரன் , நகரசெயலாளர் ஜி . நாகராஜன் ஆகியோர் முன்னிலையில் கந்தர்வகோட்டை கறம்பக்குடி சாலையில் நாற்றுநடும் போராட்டம் நடைபெற இருந்தது. 
அப்போது, வருவாய்த் துறையினர் நெடுஞ்சாலை துறையினர் சாலையை சீரமைக்கவுள்ளதாக தந்த கடிதத்தின் நகலை காவல் ஆய்வாளர் மூலமாக போராட்டக் குழுவினரிடம் வழங்கினர். இதையடுத்து,  சாலையில் நாற்றுநடும் போராட்டம் கைவிடப்பட்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.