புதிய முகவரிக்கு குடிபெயர்ந்தார் நிதீஷ் குமார்! 98.47 சதவீத ரூ.2,000 நோட்டுகள் திரும்பிவிட்டன: ரிசா்வ் வங்கி மேற்கு வங்கம்: 15 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு! ஜிஎஸ்டி வருவாய் ரூ. 2.43 லட்சம் கோடியாக உயர்வு! கொடைக்கானலில் வாகனங்களுக்கு 2 நாள் இலவச அனுமதி! தங்கம் விலை ஒரேநாளில் 2ஆவது முறையாக குறைவு! தேர்தல் முடிந்தவுடன் சிலிண்டர் விலையை உயர்த்திய பாஜக அரசு: மு.க. ஸ்டாலின் கண்டனம் வணிக சிலிண்டர் விலை உயர்வு ஒவ்வொருவரின் உணவுத் தட்டிலும் எதிரொலிக்கும்! ராகுல் கண்டனம் ம.பி. படகு விபத்து! தாய் - மகன் கட்டிப்பிடித்தபடி உடல்கள் மீட்பு!
/

விராச்சிலையில் இன்று திருமண விழா: முதல்வர் பங்கேற்பு

புதுக்கோட்டை மாவட்டம் விராச்சிலையில் திங்கள்கிழமை நடைபெற உள்ள திருமண விழாவில் முதல்வர் கலந்து

Updated On :22 அக்டோபர் 2018, 3:56 am

புதுக்கோட்டை மாவட்டம் விராச்சிலையில் திங்கள்கிழமை நடைபெற உள்ள திருமண விழாவில் முதல்வர் கலந்து கொள்ள இருப்பதையொட்டி முன்னேற்பாடு பணிகளை மாநில மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ஞாயிற்றுக்கிழமை நேரில் பார்வையிட்டார்.
தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத் தலைவரும், அதிமுக மாவட்டச் செயலருமான பி.கே.வைரமுத்து இல்ல திருமண விழா திங்கள்கிழமை (அக்.22) நடைபெறுகிறது. 
இதில், தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, தமிழக அமைச்சர்கள், சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்க உள்ளனர்.  விழா நடைபெறும் இடம், முக்கிய பிரமுகர்கள் வருகை, சிறப்பு விருந்தினர்கள் அமரும் இடம், பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்து அமைச்சர் சி.விஜயபாஸ்கர் பார்வையிட்டார்.
சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.செந்தில்நாதன், மாவட்ட ஆட்சியர் சு.கணேஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.