கீரமங்கலம் அருகேயுள்ள காசிம்புதுப்பேட்டை அரசு நடுநிலைப்பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை வாசிப்பு அரங்கம் நடைபெற்றது.
கீரமங்கலம் அருகேயுள்ள காசிம்புதுப்பேட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் அறிவியல் சார்பில் புத்தகம் வாசிப்பதன் அவசியம் குறித்த மாணவர்களுக்கு எடுத்துரைக்கும் விதமாக வாசிப்பு அரங்கம் நடைபெற்றது.
நிகழச்சிக்கு, பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் பசீர் அலி தலைமை வகித்தார். அறிவியல் இயக்கத்தின் மாவட்டத் தலைவர் மணவாளன், த.மு.எ.க.ச. மாவட்ட துணைத்தலைவர் ரமா ராமநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆசிரியர் தியாகு வரவேற்றார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு புத்தகம் வாசிப்பதன் முக்கியத்துவம் குறித்தும், அறிவியல் புத்தகங்களை வாசிப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்து மாணவர்களிடம் பேசினார்.
நிகழ்ச்சியில், 40 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் பலரும் அறிவியல் சார்ந்த புத்தகங்களை அதிகமாக வாசித்தனர். வாசிப்பு அரங்கத்தில் கலந்து கொண்ட அனைத்து மாணவ, மாணவிகளுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டது. விழாவில், அறிவொளி கருப்பையா, அறிவியல் இயக்கத்தின் திருவரங்குளம் ஒன்றியச் செயலாளர் ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ராணிப்பேட்டை - ஆற்காடு இணைப்பு பாலாறு பழைய மேம்பாலம்: சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

தில்லி பாஜக தலைவா் பதவிக்கான போட்டி மும்முரம்
தகிக்கும் கோடை; கவனம் தேவை!

இரவு நேரங்களில் சொகுசு காரில் கால்நடைகள் கடத்தல்
வீடியோக்கள்

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கூலி பவர்ஹவுஸ்!
இணையதளச் செய்திப் பிரிவு
விஜய் தவறான கருத்தை விதைக்கிறார்! - Tamilisai விமர்சனம்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | மே 4-ல் நிகழப்போகிறதா புரட்சி? | News & Views | Epi - 29 | Dinamani
தினமணி செய்திச் சேவை

