அறந்தாங்கியில் பாரதி முற்றம் சார்பில் தமிழர் திருநாள் சிலம்பு போட்டிகள் செவ்வாய்கிழமை நடைபெற்றன.
பாரதி முற்றம் நிறுவனர் மற்றும் அஜாய் சிலம்பு பாசறையின் தலைவர் க.அஜாய்குமார் கோஷ் போட்டிகளுக்கு தலைமை வகித்தார். பாரதி முற்றம் ஒருங்கிணைப்பாளர்கள் கொடிவயல் செல்லையா, ஆசிரியை கவிதா மணிகண்டன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
போட்டிகளை, வெஸ்ட்லி ஆங்கிலப் பள்ளியின் தாளாளர் ஜெ.எம்.ஹரிஹரன் தொடக்கி வைத்தார். போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர் வீராங்கனைகளுக்கு மதுரை கீழவளவு காவல் ஆய்வாளர் ஆர். சங்கீதா, இந்திய மருத்துவக் கிளை அறந்தாங்கி முன்னாள் தலைவர் ஜெ.லெட்சுமிநாராயணன், வட்டார வளமைய மேற்பார்வையாளர் சு.சிவயோகம், மணமேல்குடி வர்த்தக சங்க செயலாளர் மு.சாமியப்பா உள்ளிட்டோர் பரிசுகளை வழங்கி சிறப்புரையாற்றினர்.
போட்டிகளை, கராத்தே சிலம்பு மாஸ்டர்கள் அ.முத்துக்குமார், கே.ஜீவானந்தம், எம்.கார்த்திகேயன், எஸ்.பாலசுப்பிரமணியன் மற்றும் பலர் நடத்தினர். போட்டிகளில் பல்வேறு மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பரிசுகளைப் பெற்றார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழ்நாடு அமைச்சரவை விரிவாக்கம்! நேரலை

அமைச்சரவை விரிவாக்கம்! புதிய அமைச்சர்களுக்கு ஆளுநர் ஆர்லேகர் பதவி பிரமாணம்!!
தமிழ்த் தாய் வாழ்த்துக்கு மீண்டும் மூன்றாமிடம்!

முதல்வர் விஜய் தலைமையில் 7 பட்டியலின அமைச்சர்கள்! இதுவரை இல்லாத அதிகபட்சம்!!
விடியோக்கள்
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |

அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏ-க்கள்?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!


