அறந்தாங்கி நகராட்சி சார்பில் ஒப்புகைச் சீட்டுடன் கூடிய வாக்குப்பதிவு இயந்திரம் குறித்த நேரடி செயல்விளக்கம் செவ்வாய்க்கிழமை செய்து காண்பிக்கப்பட்டது.
அறந்தாங்கி நகராட்சி மேலாளர் ரெ. முத்துக்குமார் தலைமையில் நகராட்சி அலுவலர்கள், வாரச்சந்தையை முன்னிட்டு ஏராளமான பொதுமக்கள் கூடும் பேராவூரணி சாலையில் ஒப்புகைச் சீட்டுடன் கூடிய வாக்குப்பதிவு இயந்திரத்தை பொதுமக்கள் பார்வைக்கு வைத்து செயல்விளக்கம் அளித்தனர்.
ஏராளமான வாக்காளர்கள் ஒப்புகைச்சீட்டுடன் கூடிய புதிய வாக்குப்பதிவு இயந்திரத்தில் தங்கள் வாக்கை செலுத்திவிட்டு அதனுடன் இணைக்கப்பட்டுள்ள ஒப்புகைச் சீட்டு இயந்திரத்தில் தாங்கள் தேர்வு செய்து வாக்களித்த சின்னம் சரியாக தெரிவதாக திருப்தி தெரிவித்தனர்.
இதேபோல், அனைத்து வார்டுகளிலும் சுழற்சி முறையில் ஒப்புகைச் சீட்டுடன் கூடிய வாக்களிக்கும் இயந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டு செயல்விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.
கந்தர்வகோட்டை: கந்தர்வகோட்டை (தனி) சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கந்தர்வகோட்டை தாலுக்காவில் உள்ள 87வாக்குப்பதிவு மையங்களில் ஒப்புகைச்சீட்டுடன் கூடிய மின்னணு வாக்குப்பதிவு குறித்த செயல்விளக்கம் திங்கள்கிழமை செய்து காண்பிக்கப்பட்டது. வட்ட தேர்தல் அதிகாரி செல்வகணபதி, வருவாய் ஆய்வாளர்கள் செந்தில்குமார், உத்திராபதி மற்றும் கிராம நிர்வாக அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் பள்ளி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் கலந்து கொண்டு செயல் விளக்கம் பெற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
முன்னேற்றத்தை சாத்தியப்படுத்திய தொழில்நுட்பம்

10,778 நாய்களுக்கு கருத்தடை அறுவைச் சிகிச்சை

பொறியியல் கலந்தாய்வு: 89,629 மாணவா்கள் விண்ணப்பம்

முதல்வரின் நேரடி கண்காணிப்பில் சிங்கப்பெண் அதிரடிப்படை: அரசாணை வெளியீடு
விடியோக்கள்

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை
