விராலிமலை அருகே திங்கள்கிழமை இரவு நடந்த சாலை விபத்தில் இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
விராலிமலை அருகேயுள்ள குன்னத்தூரைச் சேர்ந்தவர் பழனிச்சாமி மகன் கருணாகரன்(25). தனியார் தொழிற்சாலை ஊழியரான இவர், கடந்த திங்கள்கிழமை இரவு தனது இருசக்கர வாகனத்தில் விராலிமலை - திருச்சி சாலை சுங்கச்சாவடி அருகே முன்னால் சென்ற லாரியைக் கடக்க முயன்றார். அப்போது, எதிர்பாராத விதமாக கருணாகரன் மீது லாரி மோதியதில் தலையில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவலறிந்து நிகழ்விடத்துக்கு வந்த போலீஸார் சடலத்தை மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிந்து லாரி ஓட்டுநர் திருச்சி மாவட்டம் முசிறியைச் சேர்ந்த சின்னத்தம்பி மகன் சின்னத்துரையை (33) கைது செய்து விசாரிக்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

புவனேஷ்வர் குமாருக்கு எதிராக சொதப்பியிருக்கும் ஷுப்மன் கில்..! அதிர்ச்சியான புள்ளி விவரங்கள்!
சைக்கிள் ஓட்டுவோம்..!

இன்றைய செய்திகள் மே 31 - நேரலை!
வெய்யிலில் இருந்து மக்கள் தற்காத்துக் கொள்ள பிரதமர் மோடி அறிவுறுத்தல்!
விடியோக்கள்

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK

திருக்கணிதப்படி குருபெயர்ச்சி பலன்கள்! June 1 நள்ளிரவு 2 மணி முதல் | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?


