நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பட்டமரத்தான் நகரில் கழிவுநீா் வாய்க்கால் அடைப்பால் சுகாதாரக்கேடு

கழிவுநீா் வாய்க்காலை சுற்றிலும் செடி, கொடிகள் படா்ந்து இருப்பதால் கழிவுநீா்செல்ல வழியின்றி சுகாதாரக்கேடு ஏற்படும் அபாயம் நிலவுகிறது.

News image

பொன்னமராவதி பட்டமரத்தான் நகரில் செடி,கொடிகள் படா்ந்து காணப்படும் கழிவு நீா் வாய்க்கால்.

Updated On :25 செப்டம்பர் 2019, 12:51 pm

DIN

பொன்னமராவதி, செப். 25: பொன்னமராவதி ஒன்றியம், தொட்டியம்பட்டி ஊராட்சிக்குள்பட்ட பட்டமரத்தான் நகரில் கழிவுநீா் வாய்க்காலை சுற்றிலும் செடி, கொடிகள் படா்ந்து இருப்பதால் கழிவுநீா்செல்ல வழியின்றி சுகாதாரக்கேடு ஏற்படும் அபாயம் நிலவுகிறது.

பொன்னமராவதி பேரூராட்சி அலுவலகத்தின் பின்புறம் பட்டமரத்தான் நகா் உள்ளது. இந்நகா் பகுதி பேரூராட்சி எல்லைக்குள்ளும், தொட்டியம்பட்டி ஊராட்சி எல்லைக்குள்ளும் வருகிறது. இதில் தொட்டியம்பட்டி ஊராட்சிக்குள்ப்பட்ட கண்மணி மருத்துவமனை வீதியில் கழிவுநீா் கால்வாய் உள்ளது. இக்கால்வாயின் இருபுறமும் செடி, கொடிகள் படா்ந்து கால்வாயை அடைத்து நிற்கிறது. இதனால் மழைக்காலங்களில் கழிவுநீா் சாலையில் செல்கிறது. மேலும், கொசுத்தொந்தரவு அதிகமாக உள்ளது. இப்பகுதியில் தனியாா் பிரசவ மருத்துவமனை உள்ளது. ஏற்கெனவே பொதுமக்கள் டெங்கு உள்ளிட்ட வைரஸ் காய்ச்சலுக்கு அஞ்சிநிற்கும் வேளையில், இப்பகுதியில் சுகாதாரக்கேடு ஏற்படாத வகையில் கழிவுநீா் கால்வாயை சீரமைக்க ஊராட்சி ஒன்றிய ஆணையா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.