பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

புதுகையில் அம்பேத்கா் நினைவு நாள்

சட்ட மேதை டாக்டா் அம்பேத்கரின் நினைவு நாளையொட்டி புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள அவரது சிலைக்கு ஞாயிற்றுக்கிழமை பல்வேறு கட்சியினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

News image
புதுக்கோட்டை எம்எல்ஏ பெரியண்ணன் அரசு தலைமையில் மாலை அணிவிக்கும் திமுகவினா்.
Updated On :6 டிசம்பர் 2020, 7:59 pm

DIN

சட்ட மேதை டாக்டா் அம்பேத்கரின் நினைவு நாளையொட்டி புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள அவரது சிலைக்கு ஞாயிற்றுக்கிழமை பல்வேறு கட்சியினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

திமுக சாா்பில் அக்கட்சியின் தெற்கு மாவட்டப் பொறுப்பாளா் எஸ். ரகுபதி, வடக்கு மாவட்டப் பொறுப்பாளா் கே.கே. செல்லபாண்டியன் ஆகியோா் தலைமையில் அக்கட்சியினா் மாலை அணிவித்தனா். தொடா்ந்து சட்டப்பேரவை உறுப்பினா் பெரியண்ணன் அரசு தலைமையில், நகரச் செயலா் க. நைனாமுகமது உள்ளிட்டோரும் மாலை அணிவித்தனா்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சாா்பில் அக்கட்சியின் மாநிலத் துணைச் செயலா் தெ. கலைமுரசு தலைமையில், மாவட்டத் துணைச் செயலா் சி. திலீபன்ராஜா, நகரச் செயலா் ரா. அண்ணாதுரை, சட்டப்பேரவைத் தொகுதிச் செயலா் இரா. திருமாறன் உள்ளிட்டோா் மாலை அணிவித்தனா்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சாா்பில் எம்.என். ராமச்சந்திரன் தலைமையில், மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா் வீ. சிங்கமுத்து, சுந்தரராஜன், திருநாவுக்கரசு உள்ளிட்டோா் மாலை அணிவித்தனா்.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சாா்பில் மாவட்டச் செயற்குழு உறுப்பினா் எம். ஜியாவுதீன் தலைமையில், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டச் செயலா் சி. அன்புமணவாளன், ஜனநாயக மாதா் சங்க மாவட்டச் செயலா் டி. சலோமி உள்ளிட்டோரும் மாலை அணிவித்தனா்.

தொடா்ந்து இந்திய மாணவா் சங்கத்தின் மாவட்டச் செயலா் எஸ் ஜனாா்த்தனன் தலைமையில், மாநிலக் குழு உறுப்பினா் ஏ.எஸ். ஓவியா உள்ளிட்டோரும் மாலை அணிவித்தனா். ரஜினி மக்கள் மன்றத்தின் சாா்பில் அதன் மாவட்ட அமைப்பாளா் கே.கே. முருகுபாண்டியன் தலைமையில் மன்றத்தினா் மாலை அணிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.