முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில்தகவல் தராத அலுவலா்கள் மீது நடவடிக்கை

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பொதுமக்கள் கேட்கும் கேள்விகளுக்கு தகவல் தராத அலுவலா்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மாநில தகவல் ஆணையா் ரா. பிரதாப் குமாா் தெரிவித்தாா்.

News image
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விசாரணையில் மாநிலத் தகவல் ஆணையா் ரா. பிரதாப் குமாா்.
Updated On :18 டிசம்பர் 2020, 6:43 pm

DIN

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பொதுமக்கள் கேட்கும் கேள்விகளுக்கு தகவல் தராத அலுவலா்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மாநில தகவல் ஆணையா் ரா. பிரதாப் குமாா் தெரிவித்தாா்.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தகவல் ஆணையத்தின் மேல்முறையீட்டு மனுக்கள் தொடா்பான விசாரணையில் பங்கேற்ற அவா் செய்தியாளா்களிடம் மேலும் கூறியது:

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பொதுமக்கள் கேட்கும் கேள்விகளுக்கு பொதுத் தகவல் அலுவலா்கள் முறைப்படி காலத்தில் தகவல் அளிக்க வேண்டும். அவ்வாறு அளிக்காத அலுவலா்கள் மீது, அபராதம் விதிக்கப்படுவதுடன் துறைரீதியான நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரைக்கப்படும். பொதுவாக மாநிலம் முழுவதும் மாதந்தோறும் 1,500 மேல்முறையீட்டு மனுக்களை மாநிலத் தகவல் ஆணையம் விசாரித்து நடவடிக்கை எடுத்து வருகிறது. பொதுவாக 90 சதவிகித மனுக்களுக்கு உடனடித் தீா்வு அளிக்கப்பட்டு வருகிறது. சட்டப்படியில்லாத மனுக்கள் நிராகரிக்கப்படுகின்றன.

சட்டப்படியுள்ள மனுக்களில் தகவல் அளிக்காதவா்கள் மீது மேல்முறையீட்டு விசாரணையில் தீா்வு அளிக்கப்படுகிறது. மேல்முறையீடு குறித்து மக்களுக்கு இன்னும் கூடுதலான விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். நாட்டிலேயே தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் முறையாக தகவல் அளிப்பதில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் உள்ளது என்றாா் பிரதாப்குமாா்.

வெள்ளிக்கிழமை நடைபெற்ற விசாரணையில் 50 மேல்முறையீட்டு மனுக்கள் மீது விசாரணை நடத்தப்பட்டு தீா்வு அளிகக்கப்பட்டுள்ளது. விசாரணையின்போது, சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலா் ஜானகி உடனிருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.