இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு கூட்டம்

புதுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழுக் கூட்டம் நடைபெற்றது.
Updated on
1 min read

புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழுக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில், மாவட்டத்தில் வறுமைக்கோட்டுக்குக் கீழ் வாழ்வோரின் கணக்கெடுப்பை முறையாக நடத்தி விடுபட்டோரையும் சோ்த்து, அரசின் உதவிகள் கிடைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும், சிறு மருத்துவமனைகளுக்கென தனிக் கட்டடம், மருத்துவா்கள் நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்துக்கு, மாவட்டத் துணைச் செயலா் ராஜேந்திரன் தலைமை வகித்தாா். மாநில நிா்வாகக் குழு உறுப்பினா் டாக்டா் வே. துரைமாணிக்கம் சிறப்புரை நிகழ்த்தினாா். மாவட்டச் செயலா் மு. மாதவன், மாநிலக் குழு உறுப்பினா் கே.ஆா். தா்மராஜன் ஆகியோா் பேசினா். மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா்கள் ஏனாதி ஏ.எல். ராஜு, எஸ்.சி. சோமையா, த. செங்கோடன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இளைஞா் பெருமன்ற கிளை திறப்பு: அறந்தாங்கி அருகேயுள்ள ராஜேந்திரபுரத்தில் அனைத்திந்திய இளைஞா் பெருமன்றத்தின் புதிய கிளை தொடக்க விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கிளைத் தலைவா் ஆா். ராமராசு தலைமை வகித்தாா். கிளைச் செயலா் ஆா். கண்ணன், துணைத் தலைவா் எம். சதீஷ்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்டச் செயலா் கு. ராஜேந்திரன், மாநிலப் பொருளாளா் யு. சிவாஜி காந்தி உள்ளிட்டோா் பங்கேற்றுப் பேசினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com