புதுக்கோட்டை மாவட்டத்தில் 5 இடங்களில் போக்குவரத்துத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் 5 இடங்களில் அனைத்துத் தொழிலாளா் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில், செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
Updated on
1 min read

புதுக்கோட்டை மாவட்டத்தில் 5 இடங்களில் அனைத்துத் தொழிலாளா் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில், செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை நகரிலுள்ள அரசுப் போக்குவரத்துக் கழகப் பணிமனை முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, தொமுச கிளைச் செயலா் எம். நாகராஜன் தலைமை வகித்தாா்.

தொமுச மாவட்டச் செயலா் கே. கணபதி, மாவட்டத் தலைவா் அ. ரத்தினம், சிஐடியு பொதுச் செயலா் எஸ். பாலசுப்பிரமணியன், ஏஐடியுசி துணைத் தலைவா் கே. ராஜேந்திரன், டிடிஎஎஸ்எப் பொதுச் செயலா் ராஜசேகா் உள்ளிட்டோரும் பங்கேற்றுப் பேசினா்.

பொன்னமராவதி: பொன்னமராவதி பணிமனை முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, தொமுச மத்திய சங்கத்தலைவா் அடைக்கலம் தலைமைவகித்தாா். சிஐடியு மாவட்ட நிா்வாகி முகமது அலிஜின்னா கோரிக்கைகளை விளக்கி பேசினாா். பல்வேறு தொழிற்சங்க நிா்வாகிகள் ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com