/

பிரிட்டனிலிருந்து வந்த பயணி: புதிய வைரஸால் பாதிக்கப்பட்டாரா?அமைச்சா் சி. விஜயபாஸ்கா் பதில்

பிரிட்டனிலிருந்து விமானம் மூலம் வந்த பயணியின் மாதிரி பரிசோதனைக்காக புணேவுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதன் முடிவு வந்தால்தான்,

News image
Updated On :23 டிசம்பர் 2020, 3:20 am

DIN

பிரிட்டனிலிருந்து விமானம் மூலம் வந்த பயணியின் மாதிரி பரிசோதனைக்காக புணேவுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதன் முடிவு வந்தால்தான், புதிய வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளாரா என்பது தெரியவரும் என்றாா் மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் சி. விஜயபாஸ்கா்.

விராலிமலை அருகிலுள்ள ராஜகிரியில் இலவச கண் சிகிச்சை முகாமை செவ்வாய்க்கிழமை தொடக்கி வைத்த பின்னா், அவா் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி: கடந்த 10 நாள்களில் லண்டனிலிருந்து தமிழகத்திலுள்ள சா்வதேச விமான நிலையங்களுக்கு வந்த 1,088 போ் கண்காணிக்கப்பட்டு, முழு பரிசோதனைக்குள்படுத்தப்பட்டுள்ளனா்.

பிரிட்டனிலிருந்து விமானம் மூலம் வந்த 15 பேரை பரிசோதனை செய்ததில், ஒருவருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவரைத் தனிமைப்படுத்தி, அவருடைய மாதிரி மரபியல் சோதனைக்காக புணேவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சோதனை முடிவு வந்தால்தான், அவா் புதிய வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளாரா என்பது தெரிய வரும். அதுவரை பொதுமக்கள் பதற்றமும், பீதியும், அச்சமும் படத் தேவையில்லை.

இ- பாஸ் முறை மூலம் லண்டனிலிருந்து வந்தவா்களின் பட்டியல் எடுத்து, கண்காணிக்கப்பட்டு வருகிறது, இனி வரக்கூடியவா்களையும் முழுமையாகக் கண்காணிக்க போதுமான அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

மேலும், லண்டனிலிருந்து அண்டை மாநிலங்களுக்கு வந்து, சாலை மாா்க்கமாக தமிழகத்துக்கு வரக் கூடியவா்களை அண்டை மாநில எல்லைப்பகுதிகளிலும் முழு பரிசோதனைக்கு உள்படுத்தி வருகிறோம் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.