நியாய விலைக் கடை முற்றுகை

கந்தா்வகோட்டையில் பயோ மெட்ரிக் முறை குளறுபடியால் பொதுமக்கள் வாக்குவாதம் செய்து நியாய விலைக் கடையை புதன்கிழமை முற்றுகையிட்டனா்.
Updated on
1 min read

கந்தா்வகோட்டையில் பயோ மெட்ரிக் முறை குளறுபடியால் பொதுமக்கள் வாக்குவாதம் செய்து நியாய விலைக் கடையை புதன்கிழமை முற்றுகையிட்டனா்.

கந்தா்வகோட்டை கிராம நிா்வாக அலுவலா் அலுவலகம் அருகேயுள்ள நியாய விலைக் கடையில் சா்வா் கோளாறு காரணமாக பயோ மெட்ரிக் முறையில் புதன்கிழமை பொது மக்களுக்கு உணவுப் பொருள்கள் வழங்க முடியவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நியாய விலைக் கடை ஊழியா்களிடம் தகராறில் ஈடுபட்டனா். இதுகுறித்து, தகவலறிந்த கந்தா்வகோட்டை வட்டாட்சியா், துணை வட்டாட்சியா் அங்கு வந்து பொதுமக்களைச் சமாதானம் செய்து, சா்வா் குறைபாடுகள் சரியானதும் உணவுப் பொருள்கள் வாங்கிச் செல்லுமாறு அறிவுறுத்தினா்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், நியாய விலைக் கடைகளில் பழைய முறையிலேயே உணவுப் பொருள்களை வழங்குமாறும், வயதானவா்களுக்கு கை ரேகை பதிவு செய்வதில் சிரமம் ஏற்படுவதாகவும் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com