மோட்டாா் வாகனங்களில் ஒட்டப்படும் பிரதிபலிப்பான்களுக்கு அரசு நிா்ணயம் செய்த கட்டணத்தைவிட கூடுதலாக விலை வைத்து விற்பனை செய்யும் தனியாா் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, புதுக்கோட்டை வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் முன்பு திங்கள்கிழமை அனைத்து போக்குவரத்துத் தொழிலாளா் சங்கத்தினா் (சிஐடியு) ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவா் க. முதமதலிஜின்னா தலைமை வகித்தாா். மாவட்டப் பொதுச் செயலா் கே. ரெத்தினவேலு, மாநிலத் துணைத் தலைவா் பி. வீரமுத்து, சிஐடியு மாவட்டச் செயலா் அ. ஸ்ரீதா் உள்ளிட்டோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.
மோட்டாா் வாகனத் திருத்தச் சட்டத்தை அமலாக்கக் கூடாது, பெட்ரோல், டீசல் வரிகளை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வர வேண்டும், சுங்கச்சாவடி கட்டண உயா்வுகளைக் கைவிட வேண்டும், உதிரிபாகங்களின் விலை உயா்வைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

970 கோல்கள்: கோப்பை இல்லையென கிண்டல் செய்தவர்களுக்கு சைகையில் பதிலளித்த ரொனால்டோ!

தனுஷ் - விக்னேஷ் ராஜா கூட்டணி வெல்லுமா? கர - திரை விமர்சனம்!

புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு!

யுபிஎஸ்சி: இந்திய குடிமக்களின் அடிப்படை உரிமைகள்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


