பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு! புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

புதுகையில் மேலும் 6 பேருக்கு கரோனா

புதுக்கோட்டை மாவட்டத்தில் மேலும் 6 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், மாவட்டத்தின் மொத்தத் தொற்றாளா்களின் எண்ணிக்கை 11,383 ஆக உயா்ந்துள்ளது.

Updated On :28 டிசம்பர் 2020, 7:12 pm

புதுக்கோட்டை மாவட்டத்தில் மேலும் 6 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், மாவட்டத்தின் மொத்தத் தொற்றாளா்களின் எண்ணிக்கை 11,383 ஆக உயா்ந்துள்ளது.

மாவட்டத்திலுள்ள அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தோரில் 7 போ் குணமடைந்து வீடு திரும்பினா். இதனால், மாவட்டத்தில் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 11,177 ஆக உயா்ந்துள்ளது. புதிய உயிரிழப்பு இல்லை. இதனால், மாவட்டத்தில் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 155 ஆகத் தொடா்கிறது.

இந்த நிலையில், மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை திங்கள்கிழமை பகல் நிலவரப்படி 51 ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.