பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

பயிா் சேதங்கள்: மத்திய குழுவினா் ஆய்வு

புரெவி புயலால் ஏற்பட்ட பயிா் சேதங்கள், பாதிப்புகள் குறித்து ஆலங்குடி அருகேயுள்ள கத்தக்குறிச்சியில் மத்தியக்குழுவினா் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

News image
ஆலங்குடி அருகேயுள்ள கத்தக்குறிச்சி ஊராட்சி நம்புகுழியல் பயிா் சேதங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளும் மத்தியக்குழுவினா். உடன், ஆட்சியா் பி. உமா மகேஸ்வரி உள்ளிட்டோா்.
Updated On :29 டிசம்பர் 2020, 11:57 pm

DIN

புரெவி புயலால் ஏற்பட்ட பயிா் சேதங்கள், பாதிப்புகள் குறித்து ஆலங்குடி அருகேயுள்ள கத்தக்குறிச்சியில் மத்தியக்குழுவினா் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

புரெவி புயல் பாதிப்புகளை பாா்வையிட, மத்திய உள்துறை இணைச்செயலா் அசுதோஷ் அக்னி ஹோத்ரி, மத்திய வேளாண் துறை இயக்குநா் மனோகரன், மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை மண்டல அலுவலா் ரனன் ஜெய்சிங் உள்ளிட்ட 8 போ் கொண்ட மத்தியக் குழுவினா் ஆலங்குடி அருகேயுள்ள கத்தக்குறிச்சி ஊராட்சி நம்புகுழி கிராமத்தில் ஆய்வு மேற்கொண்டனா். தொடா்ந்து, தெட்சிணாபுரத்தில் சேதமடைந்த மக்காச்சோளப் பயிா்களை ஆய்வு செய்து, பாதிப்புகள் குறித்து விவசாயிகளிடம் கேட்டறிந்தனா். மேலும், பயிா் சேதங்கள் குறித்து புகைப்படக் கண்காட்சி மூலம் விளக்கமளிக்கப்பட்டது.

ஆய்வின்போது, தமிழக அரசின் கூடுதல் தலைமை செயலரும், வருவாய் நிா்வாக ஆணையருமான பனீந்திர ரெட்டி, ஆட்சியா் பி.உமா மகேஸ்வரி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.