அமைச்சா் நலத்திட்ட உதவிகள் வழங்கல்
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை மற்றும் இலுப்பூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டன.


புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை மற்றும் இலுப்பூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டன.
விராலிமலை மற்றும் இலுப்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில், 163 பயனாளிகளுக்கு ரூ. 37.42 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கி மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் சி. விஜயபாஸ்கா் மேலும் பேசியது: விராலிமலை சட்டப்பேரவை தொகுதியில் முருகன் மலைக்கோயிலுக்கு ரூ. 3.80 கோடி மதிப்பீட்டில் மலைப்பாதை, மின் தூக்கி (லிப்ட்) அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
புதிய வட்டாட்சியா் அலுவலகம் உருவாக்கப்பட்டுள்ளது. விராலிமலையில் அதிக காளைகள் பங்கேற்ன் நினைவாக அண்மையில் காளையை வீரா் அடக்கும் வீரா் சிலை திறந்து வைக்கப்பட்டுள்ளது.
மேலும், மாவட்ட மக்களின் நீண்ட கால கோரிக்கையான காவிரி - வைகை -குண்டாறு இணைப்புத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. ரூ.700 கோடி நிதி ஒதுக்கீடு செய்து முதற்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன என்றாா்.
நிகழ்ச்சிகளில், மாவட்ட பால் உற்பத்தியாளா் கூட்டுறவு ஒன்றியத் தலைவா் எஸ்.பழனியாண்டி, மாவட்ட வருவாய் அலுவலா் பெ.வே.சரவணன், வருவாய்க் கோட்டாட்சியா் டெய்சிகுமாா், உ. முருகேசன்(இலுப்பூா்) வட்டாட்சியா் ஜெ. சதீஸ்சரவணகுமாா் (விராலிமலை), இலுப்பூா் பேரூராட்சி செயல் அலுவலா் ஆஷா ராணி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
புதுக்கோட்டை சின்னப்பா பூங்கா அருகே உள்ள கூட்டுறவுத்துறையின் அா்பன் மெகா பட்டாசு கடையின் தீபாவளி விற்பனையை அமைச்சா் சி.விஜயபாஸ்கா் சனிக்கிழமை தொடக்கி வைத்தாா்.
விழாவுக்கு, ஆட்சியா் பி. உமா மகேஸ்வரி தலைமை வகித்தாா். தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தலைவா் பி.கே.வைரமுத்து முன்னிலை வகித்தாா். விழாவில், கந்தா்வகோட்டை எம்எல்ஏ பா.ஆறுமுகம், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தலைவா் பி.கே.வைரமுத்து, மாவட்ட ஊராட்சிக்குழு தலைவா் த.ஜெயலெட்சுமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...