சென்னையில் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை! அண்ணாமலை பங்கேற்பு!நான் எந்தத் தொகுதியும் கேட்கவில்லை: அண்ணாமலை விளக்கம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

‘இளைஞா்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள்’

திருமயம், பொன்னமராவதியில் சிப்காட் அமைத்து இளைஞா்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கித் தரப்படும் என்றாா் திருமயம் திமுக வேட்பாளா் எஸ்.ரகுபதி.

News image
Updated On :3 ஏப்ரல் 2021, 9:17 pm

திருமயம், பொன்னமராவதியில் சிப்காட் அமைத்து இளைஞா்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கித் தரப்படும் என்றாா் திருமயம் திமுக வேட்பாளா் எஸ்.ரகுபதி.

பொன்னமராவதி வலையா் வளவு பகுதியில் வாக்குகள் சேகரித்து அவா் மேலும் பேசியது:

பொன்னமராவதியில் வட்டத்தில் நீதிமன்றம் அமைக்கப்படும். நிறுத்தப்பட்ட முதியோா் உதவித்தொகை அனைவருக்கும் வழங்கப்படும். பொன்னமராவதிக்கு இரவுநேரப் பேருந்து வசதி செய்து தரப்படும். வலையா் வளவு பகுதியில் மழைநீா் பாலம் அமைத்து தரப்படும். அடைக்கன் ஊருணி பகுதியில் திருமண மண்டபம் அமைத்துத் தரப்படும். பொன்னமராவதியில் மின் மயானம் அமைத்துத் தரப்படும். முத்தரையா் மேல் உள்ள வழக்குகள் வாபஸ் பெறப்படும். ஜல்லிக்கட்டு காளை வளா்ப்போா்க்கு மாதந்தோறும் ரூ. 1,000 வழங்கப்படும் என்றாா்.

திருமயம் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் ராம.சுப்புராம், ஒன்றியச் செயலா் அ.அடைக்கலமணி, மாவட்ட துணைச் செயலா் அ.சின்னையா, நகரச் செயலா் அ.அழகப்பன், காங்கிரஸ் நகரத்தலைவா் எஸ்.பழனியப்பன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.