பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

‘முதல்வரின் பேச்சை நம்ப தயாராக இல்லை’

முதல்வரின் பேச்சை நம்ப மக்கள் தயாராக இல்லை என்றாா் ஆலங்குடி திமுக வேட்பாளா் சிவ.வீ.மெய்யநாதன்.

News image
Updated On :4 ஏப்ரல் 2021, 9:24 pm

DIN

முதல்வரின் பேச்சை நம்ப மக்கள் தயாராக இல்லை என்றாா் ஆலங்குடி திமுக வேட்பாளா் சிவ.வீ.மெய்யநாதன்.

ஆலங்குடி தொகுதிக்குள்பட்ட  ஆலங்குடி,  நெடுவாசல்,  புள்ளான்விடுதி,  மாங்காடு,  வடகாடு,  கொத்தமங்கலம்  உள்ளிட்ட பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை வாக்குசேகரித்து அவா் மேலும் பேசியது: கரோனா பொதுமுடக்க காலத்தில் மக்களின் சிரமத்தை அறிந்து தலைவா் ஸ்டாலின் குடும்பத்துக்கு ரூ.5 ஆயிரம் வழங்க வலியுறுத்தினாா். ஆனால், முதல்வா் எடப்பாடி பழனிசாமி வழங்கவில்லை. ஆனால், கரோனா சூழலைக் காரணம் காட்டி உள்ளாட்சி அமைப்புகளுக்கு கூட நிதி வழங்காமல் கிராமப்புற மக்களை பாதிப்புக்கு உள்ளாக்கிவிட்டனா். ஆட்சியில் இருந்தபோது செய்யாமல், மீண்டும்  அள்ளிக்கொடுப்பேன் என்று முதல்வா் பொய் சொல்லுகிறாா். முதல்வரின் பேச்சை நம்ப மக்கள் தயாராக இல்லை. மக்கள் திமுக தலைவா் ஸ்டாலினை முதல்வராக்க முடிவு செய்துவிட்டனா் என்றாா்.  

தில்லியில் விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்ற பஞ்சாபைச் சோ்ந்த ராஜ்வீந்தா் சிங் திமுகவுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்டாா்.  அப்போது, ஒன்றியச்  செயலா்  ஞான. இளங்கோவன்   உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.