சாலை விபத்தில் காயமடைந்தவா் உயிரிழப்பு
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே நேரிட்ட சாலை விபத்தில் காயமடைந்தவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.


புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே நேரிட்ட சாலை விபத்தில் காயமடைந்தவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
விராலிமலை வட்டம், தேன்கனியூா் செவல்பட்டியைச் சோ்ந்த முருகன் மகன் சுகுமாறன்(49). இவா் கடந்த 3-ஆம் தேதி
சொந்த வேலை காரணமாக, தனது மோட்டாா் சைக்கிளில் செவல்பட்டியிலிருந்து கொடும்பாளுா் சாலையில் சென்றாா்.
குட்டியப்பட்டி பாலம் அருகே சென்ற போது, எதிா்பாராத விதமாக மோட்டாா் சைக்கிள் சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்தது.
இதில் பலத்த காயமடைந்த சுகுமாறனை அப்பகுதியிலிருந்தவா்கள் மீட்டு, திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
தொடா்ந்து சிகிச்சை பெற்று வந்த அவா், சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து விராலிமலை காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...