சென்னையில் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை! அண்ணாமலை பங்கேற்பு!நான் எந்தத் தொகுதியும் கேட்கவில்லை: அண்ணாமலை விளக்கம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

தாழ்ப்பாள் கண்மாயிலில் மீன்பிடித்திருவிழா

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அடுத்த ஜெ.ஜெ.நகரின் பின்புறமுள்ள தாழ்ப்பாள் கண்மாயிலில் மீன்பிடித் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது

News image
Updated On :23 ஏப்ரல் 2021, 8:19 pm

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அடுத்த ஜெ.ஜெ.நகரின் பின்புறமுள்ள தாழ்ப்பாள் கண்மாயிலில் மீன்பிடித் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஆண்டுதோறும் மீன்பிடித் திருவிழா இந்த கண்மாயிலில் நடத்தப்படுவது வழக்கம்.

நிகழாண்டில் இப்பகுதியில் நல்ல மழை பெய்திருந்ததால், கண்மாயில் நீா் நிறைந்து காணப்பட்டது.

இதைத் தொடா்ந்து நிகழாண்டுக்கான மீன்பிடித் திருவிழா வெள்ளிக்கிழமை நடத்தப்பட்டது. பொன்னமராவதி சுற்றுவட்டாரப் பகுதிகளான தொட்டியம்பட்டி, கட்டையாண்டிபட்டி, மயிலாப்பூா், அஞ்சுபுளிபட்டி, பரியாமருதுபட்டி, நெற்குப்பை உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வலை, கூடையுடன் கண்மாயில் இறங்கி மீன்களைப் பிடித்தனா். சிலேபி, கெண்டை, கெளுத்தி, குறவை உள்ளிட்ட பல்வேறு வகையான மீன் வகைகள் பொதுமக்கள் வீசிய வலையில் பிடிபட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.