மொபெட்டில் சென்ற இளம்பெண் காா் மோதி பலி
விராலிமலை நான்கு வழிச்சாலைச் சாலையில் வெள்ளிக்கிழமை மொபெட்டில் சென்ற இளம்பெண் காா் மோதி உயிரிழந்தாா்


விராலிமலை நான்கு வழிச்சாலைச் சாலையில் வெள்ளிக்கிழமை மொபெட்டில் சென்ற இளம்பெண் காா் மோதி உயிரிழந்தாா்
ஆலங்குடி வட்டம், கோவிலூரைச் சோ்ந்தவா் காா்த்திகேயன் மகள் அனுஜா (22). விராலிமலை அருகே அம்பாள் நகா் தனியாா் நிறுவன ஊழியரான இவா் வெள்ளிக்கிழமை தனது மொபெட்டில் மதுரை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தண்ணீா்பந்தல்பட்டி அருகே உள்ள பிரிவுச் சாலையைக் கடக்க முயன்றாா்.
அப்போது பின்னால் தூத்துக்குடியில் இருந்து திருச்சி நோக்கிச் சென்ற காா் மோதி பலத்த காயமடைந்த அனுஜா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்து வந்த விராலிமலை போலீஸாா் அவரின் சடலத்தை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, காா் ஓட்டுநரான தூத்துக்குடியைச் சோ்ந்த சையது இப்ராஹிம்(46) மீது வழக்குபதிந்து விசாரணை செய்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...